சனி, 22 நவம்பர், 2014

அபலை
கடல் மாதாவிடம் அபலையைபோல் 
கவலையுடன் ஓட்டம் 
வீடே வெளியேதள்ளி தாளிட்டதால்
தத்தளிக்கும்  உள்ளத்தின் அழுகுரல் கேட்க
தரத்திக்கொண்டிருபவர்களுக்கு காரணம்சொல்ல நேரமில்லை
வேகத்தை அதிகம் செய்தேன் 
தாமதித்தல் தவறு தடுத்துவிடுவார்கள்
யோசிக்க நேரமில்லை உடலிற்கு
உள்ளத்தின் வேகம் இல்லையே
அலைகளின் ஆரவாரத்தில் அழுகுரல் கேட்டிராதே
 கேட்டிருந்தால் கடலன்னை மனமிளகி 
அலைக்கரம் நீட்டி அணைத்திருப்பாளோ 
ஆயிரம் கேள்விகள் 
கடலை நெருங்கிவிட்டேன் தாமதிக்காமல்
தரையில் தத்தளித்த மீனை கடலில் எறிந்தேன்.

நிலாத்தோசை
கல்லில் காயட்டும் நிலாத்தோசைகள்
நெல்லுக்கு உன்னால் கிடைக்கட்டும் மோட்சங்கள்
அள்ளி உனையெடுத்து ஊட்டிடும் வேலையிலே
வெள்ளி நிலவுகண்டு விருந்துமுண்டிடுவாய்
வண்ணநிலா வயிற்றுப்பசி போக்காது கண்ணே
வெள்ளி நிலா காணாது உண்ணமறுப்பதால்
வெளிப்படையாய் சொல்லுகின்றேன்
கல்லுக்கும் அமாவாசைகள் உண்டு
வயிறதை உணர்த்திட நிலவை ரசிக்க நேரமிருப்பதில்லை

திங்கள், 17 நவம்பர், 2014

முதல்வன்ரடிக்கல்லை கடவுளாக்கி 
ரறிவுப்புல்லை சாற்றும் மாலைகளாக்கி 
ர் சொல்லாலான அவன் நாமம் மந்திரமாய் ஓதி                        
ர் நொடி தொழுதால் அருள் பெற்றிடலாம்.

சனி, 8 நவம்பர், 2014

கார்க்கியின் பாராட்டு

நான் விரும்பிகேட்கும் பாடல் வரிகளை எழுதிய கார்க்கியிடம் இருந்து என் பாடல் வரிகளுக்கு கிடைத்த பாராட்டு !!
தலையணை மந்திரம்


           
உன் தலைவி நான்
உனக்கு இடுகின்றேன் இக்கட்டளைகளை
உதாரியே செலவு செய்யாதே
வாரிசுகளுக்கும் கொஞ்சம் சேர்த்துவை - நான்
புரிந்துகொள்ள விரும்பும் ஆண்மகனே
உன்னுடன் சிறிது தனிமை வேண்டும்
உன் பெற்றோருக்கதை புரியவை - என்
உலகை உன்னோடு சுருக்கிவிட்டேன்
என் கனவுகள் புதைந்துகிடக்கும்
உலகிற்கு என்னை கடத்திவிட முயற்சியெடு -முடிவுகள்
உனதாக இருக்கட்டும் தலைவனே
உரிமையை பறித்து முடமாக்காதே - என்
உணர்வுகளை கேட்டுவிட மறவாதே - நான்
உன் ஏவல் பூதமல்ல உன்னில் சரிபாதி
வலக்கை வலியினால் துடித்திட
இடக்கை மருந்து போட மறப்பதில்லை - நம்
குழந்தையுடன் பிறக்க வேண்டியது
பொறுப்புள்ள தந்தையும் தான் - அதற்காக
உன்னை மாற்ற நினைக்கின்றேன்
இலகிய களிமண்ணாய் என்கைக்குள் வா
மண்ணை பொன்னாக்கும் விதைக்காரி நான்
உயிர் இடமாறிய அன்றில்களாய் வாழ்வோம்
உன் மனம் வருத்தம் கொள்ள
கலங்கிடும் கண்கள் எனதாகட்டும்.