சனி, 8 நவம்பர், 2014

தலையணை மந்திரம்


           
உன் தலைவி நான்
உனக்கு இடுகின்றேன் இக்கட்டளைகளை
உதாரியே செலவு செய்யாதே
வாரிசுகளுக்கும் கொஞ்சம் சேர்த்துவை - நான்
புரிந்துகொள்ள விரும்பும் ஆண்மகனே
உன்னுடன் சிறிது தனிமை வேண்டும்
உன் பெற்றோருக்கதை புரியவை - என்
உலகை உன்னோடு சுருக்கிவிட்டேன்
என் கனவுகள் புதைந்துகிடக்கும்
உலகிற்கு என்னை கடத்திவிட முயற்சியெடு -முடிவுகள்
உனதாக இருக்கட்டும் தலைவனே
உரிமையை பறித்து முடமாக்காதே - என்
உணர்வுகளை கேட்டுவிட மறவாதே - நான்
உன் ஏவல் பூதமல்ல உன்னில் சரிபாதி
வலக்கை வலியினால் துடித்திட
இடக்கை மருந்து போட மறப்பதில்லை - நம்
குழந்தையுடன் பிறக்க வேண்டியது
பொறுப்புள்ள தந்தையும் தான் - அதற்காக
உன்னை மாற்ற நினைக்கின்றேன்
இலகிய களிமண்ணாய் என்கைக்குள் வா
மண்ணை பொன்னாக்கும் விதைக்காரி நான்
உயிர் இடமாறிய அன்றில்களாய் வாழ்வோம்
உன் மனம் வருத்தம் கொள்ள
கலங்கிடும் கண்கள் எனதாகட்டும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக