செவ்வாய், 24 மார்ச், 2015

எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 1


எனது  ட்விட்டர் பக்கத்தில்  -  தொகுப்பு 1
--------------------------------------------------------------------------

சமூகத்தின் பார்வையில் பகவானையும்,பாடத்தையும் முழுவதும் புரிந்துகொள்ள நினைக்கின்றவர்கள் நாத்தீகர்களும்,முட்டாள்களுமாக தெரிகின்றனர்


கோலமிடும் பெண்ணிற்கு அதன் மேல் நடந்தால் உண்டாகும் கோபம் போல்தான் படைப்பாளிக்கு அவன் படைப்பை யாராவது இழிவோ, அழிக்கவோ செய்தால் கோபம் வருகிறதுநான் கவலைப்படும்போது வெள்ளை தேசத்து கறுப்பர்கள் உவர்நீரை ஐன்னல் வழியாக கொட்டினர் அவர்களை பார்த்தவர்கள் கண்கள் என்றனர்.நட்சத்திரங்கள் வானில் லட்சங்கள் இருக்கு நீ நிலவாய் இருத்ததால் ரசித்தேன்ஓட்டபந்தயத்தில் ஓடும் ஒருவருக்கும் தெரியாது ஒன்றுக்கொன்று பந்தயம் வைத்து ஓடும் தங்களது கால்களை பற்றிகட்டின வீட்டிலும் கட்டிய பெண்ணோட உறவுலும் விரிசல் விழுந்தால் மனது தாங்காதுநாளும் பார்த்த மலரை நான் நெருங்கிட பறந்தது மலரல்ல நான்கு பட்டாம்பூச்சிஉயிருக்கு உருவம் கொடுத்துப் பார்த்து, அது அழகாக இல்லை என்றால் யாரும் உயிர்(+ஐ) விடுவதில்லைஏறு தழுவுதல் பற்றி பேசும் தமிழர்கள் ஏர் தழுவுதலை (விவசாயம்) பற்றி பேசுவதில்லைஎன் வாசகி நீ திருத்த கவிதைகளில் பிழை சேர்க்க பழகி விட்டேன்உன் கண்கள் பூக்கள் என்று அதில் வாழும் வண்டுகள் சொன்னது !ஆபத்தாதலால் தான் வெடிக்கு கூட 'கன்னி' என்று பெயர் வைத்து இருக்கின்றனர்.தாய்ப்பாலை திருடி காசாக்கும் கயவர்களை துரத்த மறந்த பசுக்களே உங்களுக்கு தெரியுமா இன்றைய பால் விலை என்னவென்று?நயனம் ,நளினம்,நாணம் நான் தேடும் பெண்ணின் அடையாளம்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக