செவ்வாய், 24 மார்ச், 2015

எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 2

எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 2
----------------------------------------------------------------

இந்தியா என்றால் பல மதங்களை அல்ல 
பல மனங்களை இணைக்கும் நாடு!


புரிந்துணர்வு தடைபடும் இடங்களில் 
குழப்பங்கள் கடைபோட்டு விடுகின்றன.


பெண்ணுக்கு கிடைத்த சுதந்திரமானது 
சிறையிலிருந்து விடுதலை தந்து 
காலில் இரும்பு குண்டு கட்டிவிடுவது


ஏழ்மை இருக்கும் இடத்தில் 
எளிமையும் சேர்ந்து கொள்ளும்


காதல் ஆண்மையின் தேடல் அல்ல 
ஆன்மாவின் தேடல்


உங்கள் வாழ்க்கை பயணத்தில் 
நான் ஒரு சகபிரயாணி.


நான் ஒரு கதாநாயகன் அனால் 
அது ஒரு பொம்மலாட்டம்நான் வைரம்போல 
என்னை மிதிக்க நினைத்தால் 
உன்னை புண்படுத்துவேன்
என்னை மதித்து கிரீடத் தில் வைத்தால் 
உன் மதிப்பை உயர்த்திடுவேன்


மறதி ஒரு தேசிய வியாதி என்பதால் 
உன்னை மறப்பது கடினமான ஒன்றில்லை


நாம் சுதந்திரமாய் சுவாசிப்பது 
பல வீரர்களின் மூச்சுக்காற்று


கன்னிகளுக்கு கன்னிகாதானம் ஆகும் வரை 
பெற்றோர்கள் காரடையாள் கல்யாணம் செய்து 
ஆறுதல்பட வேண்டியதுதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக