ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

ஓவிய ஃபிரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் - கவிதை நூல் விமர்சனம்      அறிமுகமான சிலநொடிகளிலேயே பலநாள் பழகியவர் போல கலகலவென பேசுபவர் தோழர் சூர்யா அவர்கள்.மேடைப்பேச்சுகளில் கணீர் என ஓங்கி ஒலிக்கும் அவர் குரல்.

காதலர் தினத்தை முன்னிட்டு வாசிக்க அவரின் 'ஓவிய ஃபிரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்' கவிதை நூலை எடுத்தேன்.சூர்யாவின் இதய ஃபிரேமிலிருந்து வெளியேறும்  காதலிய கவிதைகள் சிறகடித்து சந்தோஷ வானில் மிதந்தபடி இருக்கின்றன.வாழ்க்கை,குடும்பம்,ஆன்மா இவற்றின் மீதான ஆழமான புரிதல் இவரின் கவிதைகளில் தெரிகின்றது.கடவுளர் மற்றும் சரித்திரகால கதாபாத்திரங்களை கொண்டு தாம் கூறவந்த கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றார்.

'தாசி அம்மன் குறித்த புனைவாளனின் பிரதி' என்ற கவிதை குறிப்பிட தகுந்த சிறந்த கவிதை ஆகும்.இந்த பெயர் குறித்து பல எதிர்மறை கருத்துக்கள் ஒருபக்கம் இருக்கட்டும்.'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' என்றான் பாரதி.பெண்களை தெய்வமாக பார்ப்பதாய் சொல்லும் இந்த நாட்டில் தான், பெண்கள் பலர் பாலியல் தொழிலில் பலவந்தமாக தள்ளப்படுகிறார்கள்.தாசியை, அம்மனாக சித்தரிப்பது தவறு என்றால்,தெய்வமாக பார்க்கப்பவேண்டிய பெண்களை தாசியாய் பார்ப்பது தவறுதானே.

ஆடவா ...
உன்புறக்கண்ணுக்கு அந்த தாசி அம்மனின் 
மறைக்கப்பட்ட நிர்வாண தரிசனம் 
பிடிபட்டுப்போக உபாயம் ஒன்று உண்டு சொல்லட்டுமா...
உன்னுள் இருக்கும் பெண்ணை 
எழுப்பினால் போதும்.

இந்த வரிகள் ஒரு பெண்ணின் மனதை நன்கு அறிந்த ஒருவரால் தான் எழுதமுடியும்.

காதல் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போதே திடீர் என்று ஒரு ஞானியை போல பேசுகின்றார்.

ஆக்ஞா சக்கரம் ஈர்க்கும் 
வாழ்வின் ஞானமென 
நின்றாய் நீயே 
என் புருவமத்தியாய்.   

வெயிலைப் போன்ற அரூப உணவு.


'காதல் சிறு குறிப்பு வரைக' மற்றும் 'கண்ணாமூச்சி ஆட்டம் ' கவிதைகள்  வசன நடையில் இருந்தபோதிலும்,கருத்து ஆழம் மிக்கவை.


பள்ளி மேடைகளில் கர்நாடக சங்கீதம் தொடர்ந்து போய்க்கொண்டு இருக்கும்போது .கானா பாடலை ஒருவர் பாடியது போல எளிய மக்களின் மொழிகளிலும் கவிதைகள் காணப்படுகின்றது.

 மாரியம்மா விக்கும் ஒண்ணுரெண்டு புளிக்கும் ஆரஞ்சு பயத்தையும் 
பயூக்கவெக்குது கண்ணு தெரியாதவனின் பிச்சைப்பாட்டு.

என்னை ஈர்த்த வரிகள் சில


கனவில் பெய்யும் மழை 

நீர் நிரம்பிய பலூனுக்குள் 
தன்குட்டியைச் சுமந்து திரியும் 
கடல்குதிரையின் ஆண்மையாய்..

காத்திருத்தல் -சுருக்கமான விடையளிக்கவும் 


வரைந்தவன் இல்லாத போதும் 

தெருஓவியத்தின் மீது 
இறைந்து கிடைக்கும் காசுகளை 
பட்டினியில் கடந்து செல்லும் 
பிச்சைக்காரனும் தொடாத..
நம்பிக்கை சாகாதேசத்தில் 

பிச்சை எடுத்து பின் சாகு 


மேகம் என்பது மிதக்கும் நீர் 

கடல் என்பது திரவமேகம் 

பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் .ஆண்களே பெண்ணின் மனதை கொஞ்சம் கடன் வாங்கிக்கொள்ளுங்கள்.


சிறந்த முன்னுரை வழங்கிய மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும், அழகிய முகப்போவியம் தீட்டிய ஸ்ரீனிவாசன் நடராஜன் அவர்களுக்கும் , கவிதைகளை புத்தகமாக வெளியிட்ட மேகா பதிப்பகத்திக்கும் என் வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

விலங்கு


அம்மா வேலையை 
முடிக்கும் வரை 
கைபேசி விலங்கிட்டு 
கிடந்தது பிள்ளை


பால் மண(ன)ம் மாறட்டும்


குழந்தைகளே பால்குடியை  மறந்து
சோறு  உண்ணக் கற்றுக்கொள்ளுங்கள்
அதுதான் மலிவு விலை

நடிகர்களே உங்கள் உருவப்பலகைக்கு
ரசிகர்கள் செய்யும் பாலாபிஷேகம் 
வேண்டாமென சொல்லிவிடுங்கள்

வயிற்றுக்கே பாலில்லை கன்னிகள்
 புற்றுக்கு எப்படி கொடுப்பார்கள்
 நாகங்களே மன்னித்துவிடுங்கள்

கடவுள்களே பால் இல்லாத 
குடமுழுக்கை கனிவோடு பெற்று 
அருள் கொடுத்திடங்கள்

தேனீர் கடைக்காரர்களே தேடிக்கொள்ளுங்கள் 
வேறு வேலையை பாலில்லாத பாணங்களை 
நாங்கள்  விரும்புவதில்லை 

ஆண்மாக்களே பாலின்றி சாந்தி அடைந்திடுங்கள் 
பாலை பூமிக்கு வார்த்திடும் 
வள்ளல்கள் நாங்களில்லை 

அன்னம் உயிரோடிருந்தால் 
நீரிலிருந்து பாலை எடுக்கும் 
வித்தையை கேட்டிருக்கலாம்

 தாய்ப்பாலை திருடி காசாக்கும் கயவர்களை 
துறத்த மறந்த பசுக்களே உங்களுக்கு 
தெரியுமா இன்றைய  பால் விலை என்னவென்று 

ருசி


குமுதாவிற்கு அவள்
அம்மா வைக்கும்
கோழிக் குழம்பு 
ருசியாகத்தான் இருந்தது 
அவள் ஆசையாக 
வளர்த்த  கோழி 
குழம்பில் கொதிக்கும் வரை  செவ்வாய், 24 மார்ச், 2015

எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 5


எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 5
-------------------------------------------------------------

விசுவாசமாய் இருப்பதால்தான் என்னவோ நாயின் வாலும் ,ஏழையின் முதுகெழும்பும் வளைந்தே இருக்கின்றன.


உறவுகள் உணர்வுகளால் பகுக்கபடுகின்றன்.


ஆதிக்கவாதிகள் நடத்துவது குடும்பமாக இருக்காது 
ராஜங்கமாகதான் இருக்கும்


கண்கொட்ட மறந்த குழந்தை நானடி,
நீதானே என்னை தாலாட்டிடும் தாய்மடி


என் மனசாட்சியுடன் சண்டை போடும் பொழுதெல்லாம் 
அதற்கு சேலை கட்டி பார்த்துக்கொள்வேன்

எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 4

எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 4
--------------------------------------------------------------------------

உனக்கு புரியாது என் பாஷை மட்டுமல்ல 
என் காதலும் தான்.


சந்தர்ப்பவாத ஆஸ்திகர்களைவிட 
நித்திய நாஸ்திகர்களே மேல்


உள்ளே இருக்கும் வெப்பம் நீங்கினால் சூரியன்கூட கரித்துண்டம்தான்,அதுபோல்தான் மனித வாழ்வும்


இறந்து தெரியாத உலகத்திற்கு போவதைவிட
தெரிந்த பூமியில் வாழ்வதே மேல்.


சிறந்த சிந்தனைகள்
சீரான பாதைக்கு வித்து


தமிழ் தமிழனின் பேச்சில் கலந்த ஒன்றல்ல 
மூச்சில் கலந்த ஒன்று


என் மரணம் உன்னை பொருத்தவரையில் செய்தி.

எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 3


எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 3
---------------------------------------------------------------------------

காசு பணம் செல்லா இடங்களில் 
காதல் கவிதை வெல்லுமடா


கோவை சுற்றுவட்டார பயபுள்ளங்க பயன்படுத்தும் ' உறம்பறை' என்னும் சொல்லின் அர்த்தம் ' உறவுமுறை' . அதுதான் மரூவி உள்ளது.


எம்.ஜி.அர் என்றால் கருப்பு கண்ணாடி,தொப்பி, காந்தி என்றால் கண்ணாடி,கைத்தடி.இப்படி எல்லாருக்கும் ஒரு அடையாளம் இருக்கு.தமிழனுக்கு தமிழ் தான்.


செய்ய முடியாததை சொல்லாதே(அரசியல்வாதி அல்ல நீ) ,சொல்ல முடியாததை செய்யாதே(திருடன் அல்ல நீ )மூழ்கியபின் தான் புரிந்தது 

பெண்ணின் உள்ளம் ஆழம் என்று!


ஹாஸ்ய உணர்வு இல்லாதவன் 

மனிதனாகவே இருக்கமுடியாது


உணர்வுகளுக்கு எழுத்துவடிவம் கொடுப்பவன் 

படைப்பாளி ஆகிறான்.


அகராதியை மாற்றி அமைக்க சொன்னால் நான் திருத்த விரும்புவது காதலின் விளக்கமாக தான் இருக்கும்.அழும் பிள்ளை கேட்கும் பொம்மை நீயடி