சனி, 29 செப்டம்பர், 2012

அன்னைக்கோர் அர்ச்சனை !!

ஓராயிரம் தவங்கள் செய்தேன் -என்தாயின்
வயிற்றில் கருவாய் பிறக்க

தவத்தாலே மகிழ்ந்த இறைவன் -கர்ப்பகிரகத்தில்
ஓர் இடமும் கொடுத்தான்

கண்ணீர் கடலில் மூழ்கிய - என்னை
தொப்பிள்கொடியிட்டு தங்கிப் பிடித்தாள்

கால் கை முளைத்த களிப்பினிலே -எந்தாய்
வயிற்றை பந்தாய் உதைத்தேன்

நான் செய்த பாவத்தினாலே -இம்மண்ணில்
மனிதனாய் பிறந்தேன்

முத்தமிட அவளிதழ் படவே -என்பாவங்கள்
பாதியாய் குறையும்

என்வயிற்றின் பசியறிந்து -குருவியாய்
வாய்க்குள் உணவை புதைப்பாள்

கையூன்றி தவழ்ந்த என்னை -கண்ணார
கண்டு  களிப்பாள்

தள்ளாடி நடந்த நான் -நிலைதடுமாறிட
தாங்கியே அவளும் பிடிப்பாள்

மழலைமொழி நான் பேசிட - மகிழ்ந்தவள்
என்னை வாரியே அணைத்திடுவாள்

தாலாட்டு பாடினாலே -தமிழை
மனதில் விதைப்பாள்

வீட்டிற்கு நான் வரும்வரையில் -பார்வையை
வீட்டின் பாதையில் புதைப்பாள்

இளைப்பாற மடியும் தந்து -வியர்வையை
புடவையால் துடைப்பாள்

அவள்  அன்பிற்கு இணையாய் சொல்ல -தமிழில்
ஓர் உவமை இல்லை

கை தடியாய் தாங்கிப்பிடித்து -நானென்
காலத்தை கழிப்பேன்தன்னம்பிக்கை துணையிருந்தால்


சிறகுகள் இன்றியே பறவை வானிலே பறக்கலாம் 

கைகளும் இன்றே மனிதன்  குன்றையும் தாண்டலாம் 

துடுப்பதின்றியே தோணிகள் கடலையும் கடக்கலாம் 

கிளையதின்றியே மரங்கள் காற்றை தென்றலாய் மாற்றலாம் 

துதிக்கையின்றி யானை தேக்கையும் சாய்க்கலாம் 

கதிர்கள் இன்றி கதிரவன் வெளிச்சத்தை கொடுக்கலாம் 

அலைகளின்றியே கடல் கரகோசமும் எழுப்பலாம் 

தன்னம்பிக்கை தன் துணையிருந்தால் !