ஞாயிறு, 7 டிசம்பர், 2014

காத்திருக்கிறேன் ...!
பூங்காக்களில்
புல்வெளியின் மேல்
பனிபோல் உறைந்துவிட்ட என்னை
உருகவைத்த விடியலே உனக்காக

கடற்கரையில்
மணலில் உன்பெயரெழுத
கடலலைகள் அதை அழித்துவிட
நினைவலைகள் எழுதிவிட

திரையரங்கில்
ஜோடிகளின் மத்தியில்
தனிமையாய் உன்னோடிருந்த நாட்கள்
கண்ணெதிரே திரையில் ஓட

துணிக்கடையில்
முன்குவிந்து கிடக்கும்
புடவையை பொம்மைக்கு
போர்த்தி அழகு பார்த்தபடி

மழையில்
துப்பட்டாக் குடைபிடிக்க
துணையில்லாது  மழையில்
மணல்குதிரையாய் என்காதல் கரைய

உணவகங்களில்
பசியின்றி
பெண்மான் தாகம்தீர்க்க
காத்திருந்த ஆண்மான்போல் உண்ணாமல்

என் மாதவி
பெரிய கட்டிடத்தினுள் புகுந்துவிட்டேன்
தனிமைக்கு ஓர் துணை இருந்தது
இமைகளின் துடிப்புக்கள் நின்றுவிட்டது
அளவளாவல் எல்லை கடந்து சென்றுவிட்டது
இடப்பட்ட கட்டளைகளை முடிக்கும்வரை
வயிறுக்கு உணவு தேவைப்படாது
உலகை மறந்த நிலைதான்
மனைவியை பற்றிய நினைவு எழும்போது
உறங்க செய்துவிட்டு கிளம்பினேன்
கடைசியாக என்னைப் பார்த்துசிரித்த
மாதவியென் அலுவலக கணினி !!