செவ்வாய், 24 மார்ச், 2015

எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 5


எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 5
-------------------------------------------------------------

விசுவாசமாய் இருப்பதால்தான் என்னவோ நாயின் வாலும் ,ஏழையின் முதுகெழும்பும் வளைந்தே இருக்கின்றன.


உறவுகள் உணர்வுகளால் பகுக்கபடுகின்றன்.


ஆதிக்கவாதிகள் நடத்துவது குடும்பமாக இருக்காது 
ராஜங்கமாகதான் இருக்கும்


கண்கொட்ட மறந்த குழந்தை நானடி,
நீதானே என்னை தாலாட்டிடும் தாய்மடி


என் மனசாட்சியுடன் சண்டை போடும் பொழுதெல்லாம் 
அதற்கு சேலை கட்டி பார்த்துக்கொள்வேன்

எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 4

எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 4
--------------------------------------------------------------------------

உனக்கு புரியாது என் பாஷை மட்டுமல்ல 
என் காதலும் தான்.


சந்தர்ப்பவாத ஆஸ்திகர்களைவிட 
நித்திய நாஸ்திகர்களே மேல்


உள்ளே இருக்கும் வெப்பம் நீங்கினால் சூரியன்கூட கரித்துண்டம்தான்,அதுபோல்தான் மனித வாழ்வும்


இறந்து தெரியாத உலகத்திற்கு போவதைவிட
தெரிந்த பூமியில் வாழ்வதே மேல்.


சிறந்த சிந்தனைகள்
சீரான பாதைக்கு வித்து


தமிழ் தமிழனின் பேச்சில் கலந்த ஒன்றல்ல 
மூச்சில் கலந்த ஒன்று


என் மரணம் உன்னை பொருத்தவரையில் செய்தி.

எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 3


எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 3
---------------------------------------------------------------------------

காசு பணம் செல்லா இடங்களில் 
காதல் கவிதை வெல்லுமடா


கோவை சுற்றுவட்டார பயபுள்ளங்க பயன்படுத்தும் ' உறம்பறை' என்னும் சொல்லின் அர்த்தம் ' உறவுமுறை' . அதுதான் மரூவி உள்ளது.


எம்.ஜி.அர் என்றால் கருப்பு கண்ணாடி,தொப்பி, காந்தி என்றால் கண்ணாடி,கைத்தடி.இப்படி எல்லாருக்கும் ஒரு அடையாளம் இருக்கு.தமிழனுக்கு தமிழ் தான்.


செய்ய முடியாததை சொல்லாதே(அரசியல்வாதி அல்ல நீ) ,சொல்ல முடியாததை செய்யாதே(திருடன் அல்ல நீ )மூழ்கியபின் தான் புரிந்தது 

பெண்ணின் உள்ளம் ஆழம் என்று!


ஹாஸ்ய உணர்வு இல்லாதவன் 

மனிதனாகவே இருக்கமுடியாது


உணர்வுகளுக்கு எழுத்துவடிவம் கொடுப்பவன் 

படைப்பாளி ஆகிறான்.


அகராதியை மாற்றி அமைக்க சொன்னால் நான் திருத்த விரும்புவது காதலின் விளக்கமாக தான் இருக்கும்.அழும் பிள்ளை கேட்கும் பொம்மை நீயடி

எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 2

எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 2
----------------------------------------------------------------

இந்தியா என்றால் பல மதங்களை அல்ல 
பல மனங்களை இணைக்கும் நாடு!


புரிந்துணர்வு தடைபடும் இடங்களில் 
குழப்பங்கள் கடைபோட்டு விடுகின்றன.


பெண்ணுக்கு கிடைத்த சுதந்திரமானது 
சிறையிலிருந்து விடுதலை தந்து 
காலில் இரும்பு குண்டு கட்டிவிடுவது


ஏழ்மை இருக்கும் இடத்தில் 
எளிமையும் சேர்ந்து கொள்ளும்


காதல் ஆண்மையின் தேடல் அல்ல 
ஆன்மாவின் தேடல்


உங்கள் வாழ்க்கை பயணத்தில் 
நான் ஒரு சகபிரயாணி.


நான் ஒரு கதாநாயகன் அனால் 
அது ஒரு பொம்மலாட்டம்நான் வைரம்போல 
என்னை மிதிக்க நினைத்தால் 
உன்னை புண்படுத்துவேன்
என்னை மதித்து கிரீடத் தில் வைத்தால் 
உன் மதிப்பை உயர்த்திடுவேன்


மறதி ஒரு தேசிய வியாதி என்பதால் 
உன்னை மறப்பது கடினமான ஒன்றில்லை


நாம் சுதந்திரமாய் சுவாசிப்பது 
பல வீரர்களின் மூச்சுக்காற்று


கன்னிகளுக்கு கன்னிகாதானம் ஆகும் வரை 
பெற்றோர்கள் காரடையாள் கல்யாணம் செய்து 
ஆறுதல்பட வேண்டியதுதான்!

எனது ட்விட்டர் பக்கத்தில் - தொகுப்பு 1


எனது  ட்விட்டர் பக்கத்தில்  -  தொகுப்பு 1
--------------------------------------------------------------------------

சமூகத்தின் பார்வையில் பகவானையும்,பாடத்தையும் முழுவதும் புரிந்துகொள்ள நினைக்கின்றவர்கள் நாத்தீகர்களும்,முட்டாள்களுமாக தெரிகின்றனர்


கோலமிடும் பெண்ணிற்கு அதன் மேல் நடந்தால் உண்டாகும் கோபம் போல்தான் படைப்பாளிக்கு அவன் படைப்பை யாராவது இழிவோ, அழிக்கவோ செய்தால் கோபம் வருகிறதுநான் கவலைப்படும்போது வெள்ளை தேசத்து கறுப்பர்கள் உவர்நீரை ஐன்னல் வழியாக கொட்டினர் அவர்களை பார்த்தவர்கள் கண்கள் என்றனர்.நட்சத்திரங்கள் வானில் லட்சங்கள் இருக்கு நீ நிலவாய் இருத்ததால் ரசித்தேன்ஓட்டபந்தயத்தில் ஓடும் ஒருவருக்கும் தெரியாது ஒன்றுக்கொன்று பந்தயம் வைத்து ஓடும் தங்களது கால்களை பற்றிகட்டின வீட்டிலும் கட்டிய பெண்ணோட உறவுலும் விரிசல் விழுந்தால் மனது தாங்காதுநாளும் பார்த்த மலரை நான் நெருங்கிட பறந்தது மலரல்ல நான்கு பட்டாம்பூச்சிஉயிருக்கு உருவம் கொடுத்துப் பார்த்து, அது அழகாக இல்லை என்றால் யாரும் உயிர்(+ஐ) விடுவதில்லைஏறு தழுவுதல் பற்றி பேசும் தமிழர்கள் ஏர் தழுவுதலை (விவசாயம்) பற்றி பேசுவதில்லைஎன் வாசகி நீ திருத்த கவிதைகளில் பிழை சேர்க்க பழகி விட்டேன்உன் கண்கள் பூக்கள் என்று அதில் வாழும் வண்டுகள் சொன்னது !ஆபத்தாதலால் தான் வெடிக்கு கூட 'கன்னி' என்று பெயர் வைத்து இருக்கின்றனர்.தாய்ப்பாலை திருடி காசாக்கும் கயவர்களை துரத்த மறந்த பசுக்களே உங்களுக்கு தெரியுமா இன்றைய பால் விலை என்னவென்று?நயனம் ,நளினம்,நாணம் நான் தேடும் பெண்ணின் அடையாளம்.